HYIP-High Yield Investment Program
எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச ஜாப் என்னென்னு கேட்டா, HYIP தான் என்று ரொம்ப சுலபமாக சொல்லிடலாம். ஏனெனில் கையிலிருக்கிற பணத்தினைக் கொடுத்தால் போதும், அதனை அவர்கள் ரொம்பப் பெரிசாக்கிக் கொடுத்திடுவோம் என்று சொல்லுவாங்க, அதனைக் கேட்ட உடனே நாமெல்லாம் கையிலிருக்கிற பணத்தினைக் தூக்கிக் கொடுத்திடுவோம் (ஆமா கொடுப்பாங்க). அவங்களும் தருவாங்க... தருவாங்க... தருவாங்க... நாளை தருவாங்க... கடைசியில் பல தளங்கள் இன்றுபோய் நாளை வா!! என்று சொல்லாமலே சொல்ல, நாமளும் தினமும் தருவாங்க தருவாங்க என்று பார்த்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.
ஆனாலும் பாருங்க, நிறையபேர் இந்த High Yield Investment Program என்கிற HYIP தளங்களில் பணத்தினை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனைத் தொடர்ச்சியாக பலர் செய்து கொண்டிருப்பதனைக் கண்டு நாம் அறிந்த விடயம்தான்.
ஒர் நாளைக்கு 0.30%... ஒர் நாளைக்கு 2%... ஒர் நாளை 5%.. சில தளங்கள்... ஒர் நாளைக்கு 10% கூட கொடுக்கிறாங்க... இதில் சில தளங்கள் முதலீட்டினையும் சேர்த்தே குறிப்பிட்ட தினங்களுக்கு கொடுக்கலாம்... சில வட்டி மட்டும் குறிப்பிட்ட காலம் கொடுக்கலாம். இங்கு நீங்கள் வட்டி வருவாய் மட்டும் மாதம் எத்தனை % என்பதனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒர் நாளைக்கு 1% என்பதே ரொம்ப பெரிய ரிட்டர்ன் வருவாய்தான். ஏனென்றால் இப்பெல்லாம் வங்கியில் கோல்டு லோன் என்று ஒர் மாதத்திற்கு 1% வட்டிக்கு கொடுக்கிறாங்க... சிலர் பணத்தினையே மாதம் 3% வட்டிக்கு கடன் வாங்கிக் கொள்கிறார்கள்.
3% வட்டிக்கு கடன் வாங்கிப் போட்டால் போதும்.. மாதம் ரிட்டர்ன் 30% கிடைக்குது.. வட்டி கெட்டியது போக மிச்சம் இலாபம் 27%. .. நாலு மாசம் போச்சின்னா... கடனைக் கழிச்சி நம்மப் பணமாக மாற்றிடலாம்.
இவ்வளவு ஈசியா பணத்தினைப் போட்டு பணத்தினை வாங்குகிற வழி இருக்கிற பொழுது... பணம் பணம்னு ஏங்க வேலை செய்து கஷ்டப்படணும்? ... இல்ல இருக்கிற எல்லாரும் தெரியாமல் தான் வேலை செய்துகிட்டு இருக்கிறாங்களா? பணத்தினை வாங்குகிற அவங்க தான் எதுவும் வேலை செய்யாமல் இருக்கிறாங்களா?
பெரும்பாலும் இந்த மாதிரி HYIP சைட்களெல்லாம் பாரக்ஸில் இன்வஸ்ட்மெண்ட் செய்கிறோம் என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் அதுல தான் ஹை-லிவ்ரேஜ் கொடுப்பாங்க... அதிகமாகவும் சம்பாதிக்க முடியும்.
பாரக்சில் சம்பாதிக்க பொறுமையையும், நிறைய பணமும் இருக்க வேண்டும். ஆகையால் க்ரவுடுபண்டிங்கிற்காக இலாபத்தில் % ரிட்டர்ன் கொடுத்திடுறோம் என்று பணம் வாங்கி ட்ரேடிங்க் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
உண்மையில் கொஞ்ச பேர் ரொம்ப நேர்த்தியாக ட்ரேடிங்க் செய்து இலாபம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக வருகிற HYIP தளத்தினை எல்லாம் நம்பி முதலீடு செய்தல் என்பது கூடாது. ஏனெனில் அவர்களது திறமை நமக்கு தெரியவே தெரியாது.. ஏதோ சைட்டில் சொல்லப்பட்டது என்பதற்காக நாம் முதலீடு செய்தோம் என்றுச் சொன்னால் நம்ம பணம் போய்விடவும் வாய்ப்புகள் உள்ளது.
இழப்பு ஏற்பட்டாலும் நான் தொடர்ச்சியாக செய்யக் காரணம் எனது எண்ணம் பணத்தினைக் கொடுத்தால் பணத்தினை தருவார்கள் என்ற காத்திருப்பு கிடையாது. போட்ட பணத்தினை எடுக்க வேறு என்ன வழியிருக்கிறது என்றுப் பார்த்து பணியினையும் செய்கிறோம். அதுபோல், புதிய நல்ல தளத்தினை மட்டுமே தேர்ந்தெடுத்து செய்கிறோமே தவிர பழைய ஸ்கேம் ஓனர்களால் நடத்தப்படும் புதிய தளங்களில் முதலீடு செய்வது கிடையாது.
நல்ல தளங்களா என்று பரிசோதித்து நிறைய தளங்களில் சராசரியாக முதலீடு செய்வதனால் தான் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடைசியாக போட்டப் பணம் கைக்கு வந்து சேர்ந்திருப்பதோடு மிச்சம் இலாபமும் வந்திருக்கும்.
புதியவராக வந்திருக்கும் உங்களுக்கு ஒர் தளத்தின் 10$ வாங்கியிருக்கிறேன்...தினம் 10% கொடுக்கிறாங்க என்பது இன்று மட்டும் தான் தெரியும்... நேற்று வாங்கியது போல... நாளையும் தருவாங்களா என்பது எனக்கே தெரியாது, இப்படியிருக்க உங்களுக்கு எப்படி தெரியும்?. இதுபோல் பல தளங்களில் வாங்கி.. பல தளங்களில் போட்ட பணமே வராது போய்ருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் நீங்கள் இன்று வந்த புதியவர்.
HYIP தளத்தினை மானிட்டர் செய்யும் தளத்திற்குள் சென்றுப் போய் பார்த்தால் தெரியும்... தினமும் 10-க்கும் மேற்பட்ட HYIP தளங்கள் புதியதாக வருகின்றன. அவற்றுள் பல சில நாட்களிலேயே SCAM என்ற லிஸ்டில் சேர்க்கப்பட்டுவிடும். ஒவ்வொரு நாளும் புதிய தளங்கள் வருவது போல ஏமாற்றுத் தளத்தின் லிஸ்டிலும் அவற்றில் பல சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
பிறந்தவர் இறப்பது போல... இங்கே HYIP தளங்கள் வருவதும் போவதும் நாட்கள் கணக்கிலேயே இருக்கும். சில தளங்கள் வந்த இரண்டாவது நாளே பணத்தினை சாப்பிட ஆரம்பித்துவிடுவதும் உண்டு. இது தெரியாமல் ஆசையில் பணத்தினைப் போட்டுவிட்டு காத்திருப்பவர்கள் பலர்.
HYIP தளத்தில் தொடர்ச்சியாக செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அனைவருமே தனக்கென்ற என்று வழிமுறையினைப் பின்பற்றுவதோடு, புதிய ஓனர்களால் நடத்தப்படும் நல்லத் தளங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். ஒருவரே திரும்பத் திரும்ப பெயர் மாற்றி செய்யும் தளங்களில் முதலீடு செய்யமாட்டார்கள்.
HYIP தளத்தில் பணம் சம்பாதிப்பவர்கள் யாரும், ஒர் தளத்தில் மொத்த பணத்தினையும் போட்டு தினம் % இலாபம் வரும் என்று காத்திருப்பது அல்ல. பல தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தினை சரியாகப் பிரித்து முதலீட்டை ரிஸ்க்காக வைத்து வேலை செய்கிறார்கள். அப்படி செய்யும் வேலையினை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் மட்டுமே பணம் சம்பாதிக்கிறார்களே தவிர... அந்தத் தளம் கொடுத்த % என்பதனால் மட்டுமல்ல.
HYIP தளத்தில் பணம் சம்பாதிக்க என்ன வேலை செய்கிறார்கள் என்றுச் சொன்னால், புதியதாக தொடங்கும் ஒவ்வொரு தளத்தினையும் பார்த்து... கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதிகப்பட்ச இழப்புக்குத் தயாராக உள்ள தொகையை இன்வஸ்ட் செய்து, இவர்கள் பணம் கொடுக்கிறார்களா? இல்லையா? என்பதனை பரிசோதிக்கிறார்கள்.
பணம் கொடுத்தால்... மீண்டும் கையிலிருந்து முதலீடு செய்வதில்லை. அவர்கள் கொடுத்த இலாபத்தினை மட்டுமே மீண்டும் முதலீடு செய்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ரிஸ்க் இல்லாமல் போவதோடு நீண்ட நாட்கள் இயங்கினால் தொடர்ச்சியாக பணம் வருவதோடு, ஏதேனும் ஒர் தளத்தில் ஏற்படும் இழப்பும் சரியாகி இலாபமாகிவிடுகிறது.
இந்த வேலையினை அவர்கள் தொடர்ச்சியாக தினமும் பல நல்ல ஓனர்களின் தளங்களின் வருகையினை எதிர்பார்த்து காத்திருந்து செய்கிறார்கள்... ஆகையால் பணம் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் புதியவராக வருபவர்கள் ... ஏதோ 5% கொடுக்கிறது... 10% கொடுக்கிறது என்று.. கையில இருக்கிறப் பணத்தினை முதலீடு செய்து... வரும் வரும் என்று காத்திருந்து.. ஏமாற்றம் அடைபவர்கள் பலர். அதிலும் அதிக % இலாபம் கொடுக்கும் தளமாகப் பார்த்து முதலீடு செய்து ஏமாறுபவர்களே ரொம்ப அதிகம்.
ஏமாறுவதற்கு முதல் காரணம் HYIP தளங்கள் பற்றி தெரியாமலே ஆசையால் முதலீடு செய்ததுதானே தவிர வேறொன்றும் இல்லை. அவர் ஏன் அப்படி ஒர் உறுதிமொழி கொடுத்து தளத்தினை தொடங்கினார் என்றோ... அந்தத் தளத்தினை இவர் ஏன் விளம்பரப்படுத்துகிறார் என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை.
அவரவர் வேலையை அவரவர் சரியாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நீங்கள் உங்கள் வேலையை சரியாகச் செய்தால் உங்களுக்கும் பலன் கிடைக்கும். இல்லாது போனால் ஆசைப்பட்டு மோசம் போனக் கதையைத் தவிர வேறொன்றும் இல்லை.
HYIP தளங்களில் முதலீடு செய்வது என்பது கோயில் உண்டியலில் பணத்தினைப் போடுவது போல. உண்டியலில் போட்ட பணம் உங்களதாக இருந்தாலும் திரும்ப எடுத்தல் கூடாது இல்லையா, அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள். சாமிக் கொடுக்கும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.. கொடுத்தால் நல்லச் சாமி. இல்லைன்னா கெட்டச் சாமி.
ஆனால், ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்... சாமி நல்லச்சாமி ஆவதும்... கெட்டச் சாமி ஆவதும் உங்கள் கையில் தான் இருக்கிறதே தவிர.. சாமி கையிலும் இல்லை.. சாமி அங்கே இல்லையும் இல்லை.
உங்கள் பணி என்னவே அதனைச் சரியாகச் செய்யுங்கள். High Yield Investment Program என்றால் இன்வஸ்ட்மெண்ட்க்கு அதிக வருவாய் கொடுக்கக் கூடியது என்பது மட்டுமல்ல... அதிக இன்வஸ்ட்மெண்ட்டினை உள்ளிழுக்கும் தளமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ரிட்டர்ன் வரும்.. இல்லாவிட்டால் இல்லை.
HYIP தளத்தில் சேர்ந்து சம்பாதிப்பது என்று முடிவெடுத்துவிட்டால்.. கையில் இழப்புக்குத் தயாராக இருக்கும் பணத்தினை பத்து தளத்தில் பிரித்து முதலீடு செய்யுங்கள். பத்து சரியான தளம் கிடைக்காவிட்டால், சரியான தளம் என்று நல்ல லீடர் சொல்வதனைக் கேட்டு அதில் மட்டும் முதலீடு செய்யுங்கள். தினம் தினம் கிடைக்கும் பேமண்டினை உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள். நாளை சேர்த்து வாங்கலாம் என்று கிடப்பில் போடாதீர்கள்.
ஒர் நல்ல தளத்தினை தேர்ந்தெடுக்க, தளத்தில் டொமைன் பெயரைப் பார்ப்பதனைக் காட்டிலும், இத்தளம் யாரால் நடத்தப்படுகிறது என்று அந்த தளத்தின் உரிமையாளரை அறிய முற்படுங்கள். அவரது முந்தைய செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்று பார்த்து செயல்படுங்கள். ஏற்கனவே, முதலீட்டுக்கு இலாபம் கொடுக்காமல் தளங்கள் மூடியவர் என்றுச் சொன்னால், அவர் எத்தனை புதிய தளத்தினை தொடங்கினாலும் அவ்வாறே இருப்பார், ஆகையால் அதுபோல் முன்பு விரைவாக ஸ்கேம் செய்த நபர்களால் நடத்தப்படும் தளங்களில் முதலீடு செய்யவே செய்யாதீர்கள்.
நிறைய தளங்கள் முந்தைய ஸ்கேம் ஓனர்களாலே தினம் தினம் புதிய பெயர்களில் தொடங்கப்படுகிறது. ஆகையால், பத்து தளத்தில் பிரித்து போட வேண்டும் என்று இவ்வாறான ஸ்கேம் ஓனர் கையிலேயே கொடுத்தாலும் கடைசியில் கையிருப்பு காலியாகிவிடும்.
வருடத்தில் எப்படியும் ஐந்து முதல் பத்து புதிய தளங்கள், புதிய ஓனர்களால் தொடங்கப்படுகின்றன. இந்த புதிய ஓனர்களினால் நடத்தப்படும் தளங்களே பெரும்பாலும் ஆரம்பக்கட்டத்தில் முதலீடு செய்வோர்க்கு இலாபம் கொடுக்கின்றன. ஆகையால், பெரும்பான்மையான HYIP முதலீட்டு விரும்பிகள், இப்படியான புதிய ஓனர்களுக்காக காத்திருந்து, வருகையில் சரியாக ஆரம்பத்திலேயே பயன்படுத்தி முதலீடு செய்து இலாபம் பார்த்துவிடுகிறார்கள்.
எந்தவொரு தளத்திலும் முதலில் ஒர் இழப்பிற்கான தொகையினை முதலீடு செய்துவிட்டோம் என்றுச் சொன்னால், அடுத்து கையிலிருந்து பணத்தினை முதலீடு செய்தல் கூடாது. இரண்டாவது கட்ட முதலீடு என்பது அங்கிருந்து பெற்ற இலாபத்தினை மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும். நமது ஆரம்பக்கட்ட முதலீட்டினை எடுத்துப் பாதுகாப்பாகிவிட வேண்டும். ஏனெனில், வரும் முதலீடுகளைக் கொண்டு ஆரம்பக்கட்டத்தில் எல்லோருக்கும் பணம் கொடுத்துவிடுவார்கள், பின்னர் முதலீடு வரத்து குறைந்துவிட்டால் சரியாக சொன்னபடி இலாபத்தினை அவர்களால் வேறு இடத்திலிருந்து சம்பாதிக்க முடியாத காரணத்தினால் கொடுக்க முடியாமல் தளத்தினை மூடிவிடுவார்கள். ஆகையால், ஒர் தடவை முதலீடு செய்துவிட்டால் அடுத்தக்கட்ட முதலீடு என்பது அதன் இலாபத்திலிருந்துதான் செய்தல் வேண்டுமே தவிர... பணம் சரியாக 30 நாட்களாக கொடுக்கிறார்கள் என்று கூடுதலாக பெரிய முதலீடு செய்வோம் என்று செய்துவிடாதீர்கள், அது ஆபத்தாக முடிந்துவிடலாம்.
ஒர் HYIP Monitor போல் செயல்பட்டு, பிறர்க்கும் HYIP தளம் பற்றி அலர்ட் செய்ய முதலில் நீங்கள் ஒர் வருடம் HYIP தளங்களில் முதலீடு செய்து இலாபம் சம்பாதித்துவிட்டு, அதன் பின்னர் தெரிந்தவர்களுக்கு இவ்வாறு ஒர் எளிதான வருவாய் வாய்ப்பு உள்ளது என்று அறிமுகம் செய்யுங்கள்.. இல்லாவிட்டால், பிறர் ஏமாற்றி உங்களது பெயரும் கெட்டுப் போய்விடும்.
பிறர்க்கு அறிமுகம் செய்வதாக இருந்தா நல்ல தலைமையின் கீழ் நடக்கும் தளங்களைத் தேர்ந்தெடுத்து இழப்புக்குத் தயாரான பணத்தினை முதலீடாகச் செய்யுங்கள். பணம் கொடுத்தால் பணம் கொடுக்கிறது என்றுச் சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று முத்திரை குத்துங்கள். அதுமட்டுமில்லாமல், பிறரையும் இழப்புக்கு ஏற்ற தொகை மட்டும் தொகை மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும் என்று தெளிவாகக் கூறிவிடுங்கள். கடன் வாங்கி எவரும் முதலீடு செய்திடப்போகிறார்கள். அவ்வாறு கடன் வாங்கி HYIP தளங்களில் முதலீடு செய்தால் கடைசியில் பெரும் ஏமாற்றமே கிடைக்கும். ஆகையால் அந்தத் தவறினை ஒர்போதும் செய்துவிடாதீர்கள்.
பெரும்பான்மையான தளங்கள் தினசரி பேஅவுட் கொடுப்பதால்... 10 சைட்டில் சேர்ந்தால் கூட,,, தினம் ஒன்றுக்கு மேற்பட்ட பேமண்ட் வந்து கொண்டே இருக்கும். பேமண்ட் வர வர.. அதனை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நாங்களும் ஒர் தளம் அக்டிவில் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்வதோடு, தவறுதலான தளத்தில் முதலீடு செய்வது தடுக்கப்படும்.
வலைத்தளத்திற்கு வரும் சிலர்... ஆசையில் இருந்தால் ஆசைப்பட்டு 100$.... 200$ என்று எந்தத் தளம் அதிக % கொடுக்கிறது என்றுப் பார்த்து முதலீடு செய்வார்கள். அவ்வாறு ஒர் போதும் நீங்கள் செய்துவிடாதீர்கள். 100 டாலர் இருந்தால், 20$ என்று ஐந்தாகப் பிரித்து, ஐந்து நல்லத் தளத்தில் முதலீடு செய்யுங்கள். அதில் ஒர் தளம் போனாலும் மிச்சம் இலாபமே மற்ற தளங்கள் வாயிலாக வந்துவிடும்.
HYIP தளத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று கற்றவராக இருந்தால்... எது சரியாக பணத்தினை வழங்கும் அளவிற்கு சரியான தொகையினை குறிப்பிட்டுள்ளது மற்றும் எவ்வளவு நாளாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள் என்றுப் பார்த்து 10$.. 20$ என்று பல சைட்களில் முதலீடு செய்வார்கள்.
நீங்கள் தொடர்ச்சியாக உங்களது வலைத்தளத்தினை நடத்தி வந்தால்... தினம் தினம் உங்களுக்கு கீழே புதிய முதலீடு ஏதேனும் ஒர் தளத்தில் இறங்குவதோடு, உழைப்பிற்கான வருவாய் வந்து கொண்டே இருக்கும். இங்கே இழப்பு என்பதனைக்காட்டிலும் இலாபம் அதிகம் இருக்கும்.
எதுவும் தெரியாதவர்கள் பணத்தினை இழப்பார்கள்... அது அவர்களது அறியாமை... அதற்கு நாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. பெரிய படிப்பு.. பெரிய இடத்தில் படிக்கிறேன் என்று பல இலட்சத்தினை அனாவசியமாகக் கட்டி, தன் திறன் தெரியாமல் இழந்து கொண்டிருப்பவர்கள் நிறையபேர். ஆனால் அது அவர்களுக்கும் தெரியாது.. இதனைச் சொல்லவும் பலருக்கு புரியாது.
பிறர் ஆசையால்.. அறியாது இழக்கலாம். அந்த அறியாமையை உணர வைப்பது என்பதற்காகவே இப்பதிவு. ஆசையில் வீழ்ந்தோர்கள் என்பது HYIP தளத்தில் மட்டும் அல்ல, எந்தத் துறை ஆனாலும் சரி... மனிதன் என்றுச் சொன்னாலும் சரி, ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பொதுவாக சொல்லிவிடலாம். ஆகையால் நிறைய ரிட்டர்ன் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு எதனையும் செய்துவிடாதீர்கள்.
இங்கு விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளதால், நீங்கள் அவ்வாறு பணம் போய்விட்டது என்றோ... ஏமாற்றிவிட்டார்கள் என்றோ சொல்லவே சொல்லக்கூடாது. ஏனெனில் இங்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன்.. HYIP தளத்தில் முதலீடு என்று நீங்கள் செய்வது முதலீடு அல்ல.. கோயில் உண்டியலில் போட்டப் பணம். அந்தப் பணம் உங்களுக்கு சொந்தமல்ல. அதற்கான எதிர்பார்ப்பு என்பதும் உங்கள் உழைப்பிலும் திட்டமிட்டச் செயலிலும் என்று உங்களுக்குள்ளேதான் உண்டே தவிர,, அடுத்த இடத்தில் சாமி இல்லை. சாமி உங்களுக்குள் மட்டும் தான்.
அடுத்தவர்கள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது இல்லாமல்... கடமையைச் செய்கிறேன், பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று பணியினைச் செய்து கொண்டே இருந்தால்.. ஏதேனும் ரூபத்தில் உங்களுக்கு இலாபம் கிடைக்கும்.
செய்யுங்கள் தெரிந்து செய்யுங்கள் தெளிந்து செய்யுங்கள், பலனை அனுபவியுங்கள்.
கடைசியாக மீண்டும் சொல்லிவிடுகிறேன், ஏனெனில் இவ்வளவு படிச்சிட்டு கடைசியில் என்ன சொன்னேன் என்று தெரியாமல் இருந்துவிடக்கூடாது இல்லையா, HYIP தளங்களில் இலாபம் சம்பாதிக்க, பல நல்ல புதிய ஓனர் தளங்களை தேர்ந்தெடுத்து சின்னச் சின்ன இழக்க ஏற்ற முதலீடுகளைச் செய்து, வரும் வருவாயினை தினம் தினம் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாம் கட்ட முதலீடு என்று கையில் இருப்பதனைச் செய்யாதீர்கள் அத்தளத்தில் சம்பாதித்தனை மட்டுமே இரண்டாம் கட்டமாக செய்யுங்கள், அல்லது அத்தோடு நிறுத்துவிட்டு அடுத்த புதிய ஓனர்க்காக காத்திருந்து முதலீடு செய்யுங்கள். அதிலும் ஒர் தளத்திற்கு என்று நீங்கள் பிரித்த தொகையை மட்டுமே செய்யுங்கள்.. முந்தைய தளத்தில் கிடைத்த இலாபம் என்று இரண்டையும் சேர்த்து பெரிதாக போட்டு பெரிதாக வாங்கலாம் என்று நினைக்காதீர்கள். பெரிதாக போட்டால் பத்து தளத்திலும் அதைப்போல் பெரிதாக சரிசமமான தொகையே செய்தல் வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment